செய்திகள்

விவசாயிகள் உரிமைக்காக நாடாளுமன்றத்தின் வெளியே காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2018-07-19 06:14 GMT   |   Update On 2018-07-19 06:14 GMT
விவசாயிகள் உரிமைகளை மீட்டுத்தர கோரி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் வெளியே இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #ParlimentMonsoonSession #Congress #YSRCongress
புதுடெல்லி:

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒப்புதல் அளித்தார். இதுதொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நாளை நடக்கவுள்ளது. 
    
இந்நிலையில், விவசாயிகள் உரிமைகளை மீட்டுத்தர கோரி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் வெளியே இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தின் வெளியே திரண்ட காங்கிரசார் தங்கள் கைகளில் நெல்மணிகளை குவியலாக வைத்தும், விவசாயிகளுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பான பதாகைகளை கைகளில் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதேபோல், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களால் நாடாளுமன்ற வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. #ParlimentMonsoonSession #Congress #YSRCongress
Tags:    

Similar News