செய்திகள்

ஒரே நேரத்தில் தேர்தல்: காங்கிரஸ் முடிவில் மாற்றம்

Published On 2018-07-08 03:25 IST   |   Update On 2018-07-08 03:25:00 IST
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பிரச்சினை குறித்து காங்கிரஸ் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் தெரிவித்துள்ளார். #Congress #RPNSingh
புதுடெல்லி:

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பிரச்சினையில், காங்கிரசின் முடிவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பாரதீய ஜனதாவின் யோசனை தவறானது என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் நேற்று டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பிரச்சினை குறித்து காங்கிரஸ் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும் என்றார்.

இதன்மூலம், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு ஆதரவா? எதிர்ப்பா? என்பதில், காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்த இயலாத நிலையில் இருப்பது தெரிகிறது. #Congress #RPNSingh 
Tags:    

Similar News