செய்திகள்

சாய்பாபா கோவிலுக்கு பிச்சைக்காரர் ரூ.1 லட்சம் நன்கொடை

Published On 2018-07-06 11:15 IST   |   Update On 2018-07-06 11:15:00 IST
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு இளநீர் அபிஷேகத்திற்காக பிச்சைக்காரர் ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
நகரி:

ஆந்திர மாநிலம் விஜயவாடா முத்தியால்பாடு பகுதியில் சீரடி சாய்பாபா மந்திரம் என்ற கோவில் உள்ளது.

சாய்பாபா மகாசமாதி அடைந்து 100 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த கோவிலில் வருகிற 26-ந்தேதி 1 லட்சம் இளநீர் அபிஷேகம் நடக்கிறது.

இந்த இளநீர் அபிஷேகத்துக்காக அதே சாய்பாபா கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர் யாகிரெட்டி என்பவர் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் நன்கொடை அளித்துள்ளார். அவருக்கு கோவில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

இவர் இதற்கு முன்பு அந்த சாய்பாபா கோவில் கட்டுவதற்காக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி இருந்தார்.

இதுகுறித்து பிச்சைக்காரர் யாகிரெட்டி கூறுகையில், “நான் இந்த கோவில் வாசலில் பிச்சை எடுக்கிறேன். சாய்பாபா அருளால்தான் எனக்கு இவ்வளவு பணம் கிடைக்கிறது. எனவே அந்த பணத்தை சாய்பாபாவுக்காகவே செலவு செய்கிறேன்” என்றார்.

Tags:    

Similar News