செய்திகள்

மத்திய அரசின் அனுமதி பெற்று மேகதாது அணை கட்டப்படும் - பட்ஜெட்டில் குமாரசாமி அறிவிப்பு

Published On 2018-07-05 09:14 GMT   |   Update On 2018-07-05 09:14 GMT
பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என பட்ஜெட் உரையில் அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். #KarnatakaBudget
பெங்களூர்:

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர் அம்மாநில முதல்வர் குமாரசாமி இன்று பொது பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது 34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.

மேலும், பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க மத்திய அரசின் அனுமதி பெற்று காவிரி நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என அவர் அறிவித்தார். மேற்கண்ட இரண்டு அறிவிப்புகளுக்கும் அம்மாநில விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனை அடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News