செய்திகள்

வீட்டின் முன்பு பைக் ஓட்டியதற்காக தலித் இளைஞரை தாக்கிய பஞ்சாயத்து தலைவர்

Published On 2018-06-25 10:05 GMT   |   Update On 2018-06-25 10:05 GMT
மத்திய பிரதேச மாநிலம் டிகம்கர் மாவட்டத்தில் உள்ள தரம்பூர் கிராமத்தில் தன் வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காக தலித் இளைஞரை பஞ்சாயத்து தலைவர் கொடூரமாக தாக்கியுள்ளார். #BanPartiality #DalitManAttacked
போபால்:

மத்திய பிரதேச மாநிலம் டிகம்பர் எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது தரம்பூர் கிராமம். இந்த கிராமத்தில் வாழும் தலித் சமூகத்தைச் சார்ந்த தயாராம் அகிர்வால் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர், அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான ஹேமந்த் குர்மியின் வீட்டின் வழியாக சென்றுள்ளார். அவரை வழிமறித்த ஹேமந்த் குர்மி, அவரது சகோதரர் வினோத் குர்மி மற்றும் பக்கத்து வீட்டுக்காரரான தினேஷ் யாதவ் ஆகியோர் தயாராம் அகிர்வாலை மிக கொடூரமான முறையில் தாக்கினர்.

இந்த சம்பவம் குறித்து தயாராம் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் ஹேமந்த் குர்மி, வினோத் குர்மி, முன்னு குர்மி, அனிருத் குர்மி, மற்றும் அவர்களது அண்டை வீட்டார் தினேஷ் யாதவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று இரவு ஹேமந்த் குர்மி உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். #BanPartiality #DalitManAttacked
Tags:    

Similar News