செய்திகள்

பா.ஜ.க. கூட்டணி அரசு காஷ்மீரை தீயில் இட்டது, கவர்னர் ஆட்சியிலும் சேதாரம் தொடரும் - ராகுல் காந்தி

Published On 2018-06-19 19:45 IST   |   Update On 2018-06-19 19:45:00 IST
காஷ்மீரில் ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீரை பா.ஜ.க. கூட்டணி அரசு தீயில் இட்டது, கவர்னர் ஆட்சியிலும் இதன் சேதாரம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார். #BJPDumpsPDP #BJPPDP #RahulGandhi
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியுடனான கூட்டணியை பா.ஜ.க வாபஸ் பெறுவதாக அறிவித்ததை அடுத்து, காஷ்மீர் நிலவரம் தொடர்பாக பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ.க. கூட்டணி தலைமையிலான சந்தர்ப்பவாத கூட்டணி அரசு நமது தீரம்மிக்க ராணுவ வீரர்கள் உள்பட பலரை பலிகொடுத்து காஷ்மீரை தீயில் இட்டது.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தின் கடுமையான உழைப்பை வீணாக்கி, நாட்டுக்கு இழப்பையும் ஏற்படுத்தியது. ஜனாதிபதியின் தலைமையிலான கவர்னர் ஆட்சியிலும் இதன் சேதாரம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார். #Kashmir #Kashmironfire #RahulGandhi #BJPDumpsPDP #BJPPDP #Congress
Tags:    

Similar News