செய்திகள்

காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி - உள்துறை மந்திரியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தீவிர ஆலோசனை

Published On 2018-06-19 14:14 GMT   |   Update On 2018-06-19 14:14 GMT
காஷ்மீரில் முதல்மந்திரி பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததால், அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்துறை மந்திரியுடன் ஆலோசித்து வருகிறார். #BJPDumpsPDP
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க ஆதரவுடன் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைத்தது. ஜம்மு முதல்மந்திரி மெகபூபா முப்திக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக பா.ஜ.க அறிவித்தது.

இதையடுத்து பெரும்பான்மையை இழந்த மெகபூபா முப்தி தாமாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வெளியேறியதற்கு அம்மாநில மக்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்..

இந்நிலையில், முதல்மந்திரியின் ராஜினாமாவைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் தற்காலிகமாக ஜனாதிபதி ஆட்சி அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் தேசிய பாதுகாப்பு சிறப்பு செயலாளர் ரினா மித்ரா ஆகியோர் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.

விரைவில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி ஆட்சி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #BJPDumpsPDP
Tags:    

Similar News