செய்திகள்

பயங்கரவாதிகளால் கடத்தி சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரர் தொடர்பான வீடியோ வெளியீடு

Published On 2018-06-15 20:17 GMT   |   Update On 2018-06-15 20:17 GMT
காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் விடுமுறையை ஒட்டி வீட்டுக்கு சென்ற போது பயங்கரவாதிகளால் கடத்தி சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. #JammuandKashmir #Aurangzeb #Armymanabducted

ஸ்ரீநகர் :

ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் அவுரங்சீப். காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவன், ராணுவ என்கவுண்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த என்கவுன்டரை நடத்தியவர்களில் கடத்தப்பட்ட்ட அவுரங்கசீப்பும் ஒருவர். 

விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற இவரை நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றனர். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அவுரங்சீப்பின் உடலை புல்வாமா மாவட்டத்தின் குசோ பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவரை சுட்டுக்கொல்வதற்கு முன்பாக எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், அவுரங்சீப் பங்குபெற்ற பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடத்தி சென்றவர்கள் விசாரித்துள்ளனர். 



1.15 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது. அவுரங்கசீப்பை கடத்தி சென்றவர்கள் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. #JammuandKashmir #Aurangzeb #Armymanabducted
Tags:    

Similar News