செய்திகள்

உ.பி.யில் மீண்டும் இடி மின்னலுடன் மழை - ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு

Published On 2018-06-14 10:38 IST   |   Update On 2018-06-14 10:38:00 IST
உத்தர பிரதேசத்தில் மீண்டும் இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கி உள்ள நிலையில், மழை தொடர்பான விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். #UPRain #ThunderstormLashedUP
லக்னோ:

உத்தர பிரதேசத்தில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெருமளவில் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த தொடர் மழை ஓய்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்நிலையில், உ.பி.யின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கோண்டா, பைசாபாத், சீதாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றும் வீசியதால், சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

இந்த புயல் மழை தொடர்பான விபத்துக்களில்  கோண்டாவில் 3 பேரும், பைசாபாத்தில் ஒருவரும், சீதாப்பூரில் 6 பேரும் என நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ராஜஸ்தான், பஞ்சாப், அரியா, சண்டிகர் மற்றும் டெல்லியிலும் புழுதியுடன் கூடிய காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. #UPRain #ThunderstormLashedUP
Tags:    

Similar News