செய்திகள்

மாநில வளர்ச்சி மீதுதான் எனக்கு அக்கறை - மோடியின் பிட்னஸ் சவாலுக்கு சூடாக பதில் அளித்த குமாரசாமி

Published On 2018-06-13 12:01 IST   |   Update On 2018-06-13 12:01:00 IST
பிரதமர் மோடி இன்று தனது உடற்பயிற்சி குறித்த வீடியோவை வெளியிட்டு விடுத்திருந்த பிட்னஸ் சவாலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி உடனடியாக பதில் அளித்துள்ளார். #FitnessChallenge #PMModi #Kumaraswamy
பெங்களூரு:

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர் பிரதமர் மோடி, இன்று தனது உடற்பயிற்சி வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.



அத்துடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற மணிகா பத்ரா மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிட்னஸ் சவால் விடுத்தார். இந்த பதிவைப் பார்த்த குமாரசாமி, உடனடியாக பதிலளித்துள்ளார்.



“என் உடல்நலத்தில் அக்கறை செலுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி. அனைவருக்கும் உடற்தகுதி முக்கியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக ஆதரவும் தெரிவிக்கிறேன். நானும் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். எனது அன்றாட உடற்பயிற்சியில் யோகா, டிரெட்மில் இடம்பெறும்.

ஆனால், உன் உடல் பிட்னசைவிட கர்நாடக மாநில வளர்ச்சியின் பிட்னஸ் குறித்தே அதிக அக்கறை கொள்கிறேன். அதற்கு உங்கள் ஆதரவு தேவை” என குமாரசாமி சூடாக பதிலளித்துள்ளார். #FitnessChallenge #HumFitTohIndiaFit #PMModi #ViratKohli #Kumaraswamy

Tags:    

Similar News