செய்திகள்

தவறான தகவலை பரப்பியதற்காக ரெயில்வேயிடம் மன்னிப்பு கேட்டார் ஷாபனா ஆஸ்மி

Published On 2018-06-06 12:34 GMT   |   Update On 2018-06-06 12:51 GMT
இந்திய ரெயில்வே குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக ரெயில்வேயிடம் பாலிவுட் நடிகை ஷாபனா ஆஸ்மி மன்னிப்பு கேட்டுள்ளார். #ShabanaAzmi
புதுடெல்லி:

பாலிவுட் நடிகையும், சமூக சேவைகியுமான ஷாபனா ஆஸ்மி நேற்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் மூன்று பேர் மிகவும் அழுக்கான நீரில் பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தனர். 

அவர்கள் ரெயில்வே ஊழியர்கள் எனவும், அந்த வீடியோவை ரெயில்வே துறை மந்திரி பியூஸ் கோயல் கவனத்தை ஈர்க்கும் வகையில் 'டாக்' செய்திருந்தார். 67 ஆயிரம் பேர் பார்வையிட்டு சுமார் ஆயிரம் பேர் ரீடுவிட் செய்த அந்த வீடியோ வைரலாக பரவியது.

அந்த வீடியோ பார்த்து அதற்கு விளக்கம் அளித்த ரெயில்வே துறை மந்திரி, 'இந்த வீடியோவில் இருப்பது மலேசியாவில் உள்ள ஒரு உணவகம். அங்குள்ள ஊழியர்கள் அசுத்தமான நீரில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்கின்றனர்' என குறிப்பிட்டிருந்தார்.

இதனை கண்ட ஆஸ்மி உடனடியாக ரெயில்வே துறையிடம் மன்னிப்பு கேட்டார். அதில், இது குறித்து விளக்கம் அளித்ததற்கு நன்றி. எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என டுவிட் செய்தார்.

ஷாபனா பாலிவுட் நடிகையாக மட்டுமல்லமால் பல சமூக சேவைகளையும் புரிந்துள்ளார். 1989-ம் ஆண்டு முதல் தேசிய ஒருமைப்பாட்டு குழுவின் உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், 1998-ம் ஆண்டு இந்தியாவின் நல்லெண்ண தூதராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ShabanaAzmi

Tags:    

Similar News