செய்திகள்

உத்தவ் தாக்கரேயை அமித்ஷா நாளை சந்தித்து பேசுகிறார்

Published On 2018-06-05 09:52 GMT   |   Update On 2018-06-05 09:52 GMT
தன்னுடைய அரசியல் எதிரி பா.ஜ.க. என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறிய நிலையில் அமித்ஷா நாளை அவரை சந்தித்து பேச உள்ளார். #BJP #Amitshah #UddhavThackeray
புதுடெல்லி:

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு இடைத்தேர்தல்களில் தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்டு வருகிறது.

சிவசேனாவுக்கு ஆதரவாக இருந்த மாநில கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக கூட்டணியில் இருந்து வெளியேறியது தான் இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்றத்துக்கு தேர்தல் வர உள்ள நிலையில் தற்போதைய நிலை நீடித்தால் அதிக இடங்களில் வெற்றி பெற இயலாது என்ற அபாயத்துக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டுள்ளது.

இந்த அபாயத்தை முன் கூட்டியே சரிப்படுத்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் பழைய கூட்டணி கட்சிகளை மீண்டும் அரவணைத்து செல்லும் நடவடிக்கைகளை தொடங்க உள்ளார்.

முதல்கட்டமாக மராட்டிய மாநிலத்தில் சிவசேனாவுடன் இணக்கமாக செல்ல பா.ஜ.க. தீர்மானித்துள்ளது. இதற்காக அமித்ஷா நாளை மராட்டியம் செல்கிறார்.

அப்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை அமித்ஷா சந்தித்து பேச உள்ளார்.

அப்போது பா.ஜ.க. கூட்டணியில் சிவசேனாவை நீடிக்க செய்ய அமித்ஷா வலியுறுத்துவார் என்று தெரிகிறது. அதன்பிறகு மற்ற மாநில கூட்டணி கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா திட்டமிட்டுள்ளார். #BJP #Amitshah #UddhavThackeray
Tags:    

Similar News