செய்திகள்

4 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சி: பிரதமர் மோடிக்கு மார்க் போட்ட ராகுல் காந்தி

Published On 2018-05-27 01:02 IST   |   Update On 2018-05-27 01:02:00 IST
மாணவர்களுக்கு ஆசிரியர் மதிப்பெண் வழங்குவது போல், மோடி ஆட்சியில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு மதிப்பெண் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் மார்க் போட்டு இருக்கிறார். #RahulGandhi #Modi #ReportCard
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி 4 ஆண்டுகளை நிறைவு செய்ததை, அக்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி ஆட்சியை விமர்சித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். மாணவர்களுக்கு ஆசிரியர் மதிப்பெண் வழங்குவது போல், மோடி ஆட்சியில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு மதிப்பெண் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் மார்க் போட்டு இருக்கிறார்.



விலைவாசியை கட்டுப்படுத்துதல், வேளாண்மை, வெளிநாட்டு கொள்கை உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டதை குறிக்கும் வகையில் அந்த துறைகளுக்காக மோடிக்கு ‘எப்‘ கிரேடு வழங்கி இருக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்தும் வகையிலான கோஷங்களை முன்வைப்பதில் மோடி சிறந்து விளங்குவதாக கூறி அதை கேலி செய்யும் வகையில், அதற்காக அவருக்கு ராகுல் காந்தி ‘ஏ பிளஸ்’ கிரேடு வழங்கி இருக்கிறார்.  #RahulGandhi #Modi #ReportCard
Tags:    

Similar News