செய்திகள்

கர்நாடக சட்டசபையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

Published On 2018-05-25 10:00 GMT   |   Update On 2018-05-25 10:30 GMT
கர்நாடக சட்டசபையில் குமாரசாமி ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். #Karnatakafloortest #BJPWalkOut

பெங்களூரு:

சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன.

இதற்கிடையே, விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருடன் துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார்.

இவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் அடக்கம். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பாஜகவின் எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், முதல் மந்திரி குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை தீர்மானித்தின் மீது இன்று நடைபெற்றது. அதற்கு முன் தனது அரசின் சார்பில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் பற்றி சட்டசபையில் குமாரசாமி பேசினார். 

அவரைத்தொடர்ந்து எடியூரப்பா பேசினார். எடியூரப்பா பேச்சின் இடையிடையே காங்கிரஸ் உறுப்பினர்கள் சப்தமாக சிரித்தனர். முதல்-மந்திரி குமாரசாமியும் இடையில் எழுந்து பேசினார். பின்னர் பா.ஜ.க. உறுப்பினர்களை அனைவரும் ஒட்டுமொத்தமாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Tags:    

Similar News