செய்திகள்

அமைதிக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள் - காஷ்மீர் பெண்களிடம் மெகபூபா வேண்டுகோள்

Published On 2018-05-23 22:28 GMT   |   Update On 2018-05-23 22:28 GMT
காஷ்மீரில் அமைதி திரும்ப உதவ வேண்டும் என அங்குள்ள பெண்களிடம் மாநில முதல் மந்திரி மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். #MehboobaMufti #WomanWorkers
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி பெண் தொழிலாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

காஷ்மீரில் கடந்த மூன்று பத்தாண்டுகளாக தொடரும் வன்முறை சம்பவங்களால் ஒரு தாயாக, மனைவியாக, சகோதரியாக மட்டுமின்றி ஒரு பெண்ணாகவும் நாம் சிரம்ப்பட்டு வந்துள்ளோம்.
சண்டை நிறுத்தப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததால் புனித ரமலான் மாதத்தில் சண்டை நிறுத்தப்பட்டு உள்ளது.

சண்டை நிறுத்தத்தை தொடர்ந்து, இந்த மாதம் முழுவதும் காஷ்மீரில் உள்ள தாய்மார்கள் அமைதியாக வாழ வகை செய்யப்பட்டு உள்ளது.     

இந்த சமுதாயத்தின் சொத்துக்களாக கருதப்படுவது இளைஞர்கள் தான். அவர்களது அறிவும், திறமையும் தவறாக பயன்பட அரசு அனுமதிக்காது என தெரிவித்துள்ளார். #MehboobaMufti #WomanWorkers
Tags:    

Similar News