செய்திகள்

ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகளின் பட்டியலை வெளியிடவேண்டும்: மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு

Published On 2017-07-02 08:56 GMT   |   Update On 2017-07-02 08:56 GMT
ஊழல் புகாரில் சிக்கி வழக்கை சந்தித்து வரும் அதிகாரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:

மத்திய அரசின் ஒவ்வொரு துறைகளிலும் உள்ள அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

சமீபத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஊழல் புகாரில் சிக்கினார்கள். அவர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.

இதில் 29 பேர் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் ஆவார்கள். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தவிர சில மூத்த அதிகாரிகள் உள்பட 68 அதிகாரிகள் மீதும் ஏராளமான புகார்கள் வந்த துள்ளன. அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஊழல் புகாரில் சிக்கி வழக்கை சந்தித்து வரும் அதிகாரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு துறையிலும் ஊழல் சிக்கியவர்களின் பெயர்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News