செய்திகள்

கெட்டிச் சாயம் தானா?: புதிய 2 ஆயிரம் ரூபாயை அலசி ஆராயும் வைரல் வீடியோ

Published On 2016-11-14 10:22 GMT   |   Update On 2016-11-14 10:22 GMT
பட்டுப் புடவைகளை வாங்குபவர்கள் சரிகையை கொளுத்திப் பார்ப்பதைப் போலவும், நூல் சேலையை வாங்கும் தாய்மார்கள் கெட்டிச்சாயம்தானா? என்று கசக்கிப் பார்ப்பதைப் போலவும் தற்போது வெளிவந்துவுள்ள 2 ஆயிரம் ரூபாயை அலசி ஆராயும் வைரல் வீடியோ 50 லட்சம் பேரின் கவனத்தை கவர்ந்து வைரலாகி வருகிறது.
புதுடெல்லி:

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் திடீர் அறிவிப்பை தொடர்ந்து நடைமுறையில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட பின்னர் கடந்த 6 நாட்களாக வங்கி கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.களின் வாசலில் அதிகாலையில் இருந்தே நூற்றுக்கணக்கான மக்கள் கால்கடுக்க வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் இருந்து சாயம் வெளியானதாக சமூக ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதற்கிடையில், பட்டுப் புடவைகளை வாங்குபவர்கள் சரிகையை கொளுத்திப் பார்ப்பதைப் போலவும், நூல் சேலையை வாங்கும் தாய்மார்கள் கெட்டிச்சாயம்தானா? என்று கசக்கிப் பார்ப்பதைப் போலவும் தற்போது வெளிவந்துவுள்ள 2 ஆயிரம் ரூபாயை அலசி ஆராயும் வைரல் வீடியோ 50 லட்சம் பேரின் கவனத்தை கவர்ந்து வைரலாகி வருகிறது.

கடந்த 11-ம் தேதி யூடியூபில் வெளியான இந்த ‘சாய ஆராய்ச்சி’ தொடர்பான அசல் வீடியோ ஐம்பது லட்சம் பேரின் கவனத்தையும், இதே வீடியோ தொடர்பான வெவ்வேறு பதிவுகள் மற்றொரு பக்கம் பல லட்சம் மக்களின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

இந்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் சாயம் போகிறதா?, இல்லையா என்பதை முடிவுசெய்ய கீழேயுள்ள வீடியோவை பார்க்கலாம்..,

Similar News