உலகம்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் ஓஹியோ வீட்டின்மீது தாக்குதல் - சந்தேக நபர் கைது!

Published On 2026-01-05 21:57 IST   |   Update On 2026-01-05 21:57:00 IST
  • தாக்குதலின்போது வான்ஸ் குடும்பத்தினர் வீட்டில் இல்லை
  • சம்பவம் குறித்து வான்ஸோ அல்லது வெள்ளை மாளிகையோ இதுவரை எந்த கருத்து தெரிவிக்கவில்லை.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் ஓஹியோ இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டி நகரில் உள்ள ஜே.டி.வான்ஸின் வீட்டில் நள்ளிரவில் நடந்த தாக்குதலின் போது வான்ஸ் குடும்பத்தினர் வீட்டில் இல்லை என்றும், மர்ம நபர்கள் யாரும் வீட்டின் உள்ளே நுழையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல் ஜே.டி. வான்ஸ் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிரான இலக்கு தாக்குதலா என்பதை புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வான்ஸோ அல்லது வெள்ளை மாளிகையோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நள்ளிரவில் வீட்டில் ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும், ஒரு நபர் ஜன்னலை சுத்தியலால் உடைத்து வீட்டிற்குள் நுழைய முயன்றதை ரகசிய சேவை அதிகாரிகள் கண்டறிந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News