உலகம்

மலேசிய தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Published On 2026-02-23 01:07 IST   |   Update On 2026-02-23 01:07:00 IST
  • சபா மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • அண்டை மாநிலமான சரவாக் பகுதியிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக

மலேசியாவின் போர்னியோ தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சபாவின் தலைநகரான கோட்டா கினபாலுவில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் பூமியின் அடியில் சுமார் 619.8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சபாவின் மேற்கு கடற்கரை பகுதிகள் மற்றும் அண்டை மாநிலமான சரவாக் பகுதியிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் மிக ஆழத்தில் ஏற்பட்டதால், பெரிய அளவிலான உயிர்ச்சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை.

நிலநடுக்கத்தின் ஆழம் அதிகமாக இருப்பதால், சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தற்போதைக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. 

Tags:    

Similar News