மெக்சிகோவில் வெடித்த வன்முறை- இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
- போதைப்பொருள் கடத்தல் தலைவன் 'எல் மென்ச்சோ' சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
- அமெரிக்காவால் 15 மில்லியன் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த மிக முக்கியமான குற்றவாளி.
மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவன் 'எல் மென்ச்சோ' சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயர்மட்டத் தலைவன் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, ஆயுதமேந்திய குழுக்கள் பல்வேறு மாநிலங்களில் மோதலில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பல்களில் ஒன்றான CJNG அமைப்பின் தலைவன் ராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால் மெக்சிகோவில் வன்முறை வெடித்துள்ளது.
அமெரிக்காவால் 15 மில்லியன் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த மிக முக்கியமான குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மெக்சிகோவில் வெடித்த கலவரத்தையடுத்து அங்குவாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மெக்சிகோவில் உள்ள இந்தியர்கள் மறு அறிவிப்பு வரும்வரை தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாமென வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மெக்சிகோவில் உள்ள இந்தியர்கள் மறுஅறிவிப்பு வரும்வரை தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாமென வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.