இந்தியா

ராஜஸ்தானில் நீட் தேர்வு மையத்தில் படித்த மாணவன் தற்கொலை

Published On 2023-02-24 18:03 IST   |   Update On 2023-02-24 18:03:00 IST
  • தற்கொலைக்கு முன்னதாக மாணவன் எழுதி வைத்த குறிப்பை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
  • படிப்பில் அழுத்தம் அதிகரிப்பதற்கு பயிற்சி நிறுவனமே பொறுப்பு என மாணவரின் தந்தை கூறி உள்ளார்.

கோட்டா:

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவன் பெயர் அபிஷேக் யாதவ். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோட்டா நகரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.

கடந்த சில தினங்களாக பயிற்சி மையத்திற்கு செல்லாமல் இருந்த அபிஷேக் யாதவ், நேற்று தனது விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கி மாட்டி தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதி வைத்த குறிப்பை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், தான் சிக்கலில் இருப்பதாகவும், படிப்பால் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறி, பெற்றோரிடம் தன்னை மன்னிக்கும்படி கூறியிருக்கிறார். எனினும் படிப்பில் அழுத்தம் அதிகரிப்பதற்கு பயிற்சி நிறுவனமே பொறுப்பு என மாணவரின் தந்தை கூறி உள்ளார்.

கோட்டா நகரில் இந்த ஆண்டு இதுவரை 4 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News