இந்தியா

வெள்ளத்தில் சிக்கிய 162 மாணவர்கள்: பத்திரமாக மீட்ட போலீசார்

Published On 2025-06-30 05:18 IST   |   Update On 2025-06-30 05:18:00 IST
  • ஜாம்ஷெட்பூரில் பெய்து வரும் கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
  • அங்குள்ள குடியிருப்புப் பள்ளியில் 162 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர்.

ராஞ்சி:

வடகிழக்கு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. ஜார்க்கண்ட் முழுதும் பருவமழை தீவிரமாகி உள்ளது. ஜூலை 5-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என ராஞ்சி வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் லவ் குஷ் குடியிருப்புப் பள்ளியில் 162 மாணவர்கள் சிக்கித் தவித்தனர்.

பள்ளி கட்டிடம் நீரில் மூழ்கியதால் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் மேல் தளத்துக்கு மாற்றினர். அங்கு அவர்கள் இரவு முழுவதும் இருந்தனர்.

தகவலறிந்து அதிகாலையில் அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் கிராம மக்களின் உதவியுடன் மாணவர்களை பத்திரமாக மீட்டனர். மீட்புப் பணிக்காக படகுகள் பயன்படுத்தப்பட்டது.

மீட்கப்பட்ட குழந்தைகள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News