இந்தியா
null

108 வயது உழைப்பாளி தாத்தா

Published On 2025-01-28 02:30 IST   |   Update On 2025-01-28 02:31:00 IST
  • உழைத்து சாப்பிட வேண்டும், பிறரை சார்ந்து இருக்க கூடாது என்பதை தாரக மந்திரமாக கொண்டவர்கள் உலகில் அரிது.
  • முதுமையை காரணம் காட்டி வீட்டில் ஓய்வெடுக்க விரும்பாமல் வீதியில் இறங்கி காய்கறி விற்று வருகிறார்.

சாதனையாளர்களும், உழைப்பாளிகளும் வயதை ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள். வயது என்பது வெறும் எண்களே என்பது அவர்களின் கருத்து.

பணி ஓய்வுக்கு பின்னர் ஒரு அறையில் ஓரமாக முடங்கி இருக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், முன்மாதிரியாகவும் ஒருசிலர் தங்களுடைய வாழ்க்கை முறையை தேர்ந்து எடுப்பார்கள். ஒரு சாண் வயிற்றுக்காக தாங்களே உழைத்து சாப்பிட வேண்டும், பிறரை சார்ந்து இருக்க கூடாது என்பதை தாரக மந்திரமாக கொண்டவர்கள் உலகில் அரிது.

அவர்களில் ஒருவர்தான் இந்த பஞ்சாப் பாட்டாளி. அந்த முதியவருக்கு வயது 60, 70 அல்ல... 100-யும் தாண்டி.... 108 வயதான அவர் முதுமையை காரணம் காட்டி வீட்டில் ஓய்வெடுக்க விரும்பாமல் வீதியில் இறங்கி காய்கறி விற்று வருகிறார்.

வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றை தள்ளுவண்டியில் வைத்து நிரப்பி கொண்டு வீதியில் விற்கிறார். அனைத்து வயதினருக்கும் தன்னம்பிக்கையை அளிப்பதாக உள்ள இவர் தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியான 3 நாட்களில் 3½ லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News