இந்தியா

தேர்வுகளில் மோசடி - 1 கோடி அபராதம் - 10 ஆண்டு சிறை - மசோதா தாக்கல்

Published On 2024-02-05 09:34 GMT   |   Update On 2024-02-05 09:35 GMT
  • கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
  • கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதன் பிறகு பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்று காலை பாராளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் பொதுத்தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் இன்று தாக்கல் செய்தார்.

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடி நடைபெறுவதை தடுப்பதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடி செய்தாலும் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News