செய்திகள்

கமல்ஹாசன் பரப்புரைக்கு தடை விதிக்க மதுரை ஐகோர்ட் மறுப்பு

Published On 2019-05-16 06:09 GMT   |   Update On 2019-05-16 06:22 GMT
கமல்ஹாசன் பரப்புரைக்கு தடை கோரிய முறையீட்டை ஏற்க மதுரை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுரை:

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தேர்தல் ஆணையத்திலும், போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பல்வேறு அமைப்புகளும், பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்களும் கமல்ஹாசனுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சரவணன் என்பவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், கமல்ஹாசன் பிரசாரத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. 
Tags:    

Similar News