செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்- தே.மு.தி.க. வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

Published On 2019-03-16 05:05 GMT   |   Update On 2019-03-16 05:05 GMT
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர்களையும் நாளை அல்லது நாளை மறுநாள் 18-ந்தேதி வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #parliamentelection #dmdk #lksudhish

சென்னை:

நீண்ட இழுபறிக்கு இடையே அ.தி.மு.க. - தே.மு.தி.க. தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. அ.தி. மு.க. கூட்டணியில் தே.மு.தி. க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த தொகுதிகள் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்குவது என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. என்றாலும் வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

அதனை அ.தி.மு.க. தலைமை ஏற்று கொண்டதாக தெரிகிறது. வட சென்னையில் அ.தி.மு.க. போட்டியிட முடிவு செய்திருந்தது.

ஆனால் தே.மு.தி.க. வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் வடசென்னையை விட்டு கொடுத்துள்ளது. தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர்களையும் நாளை அல்லது நாளை மறுநாள் 18-ந்தேதி வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்து அறிவித்து விட்டதால் இன்னும் தாமதம் செய்யக்கூடாது என அ.தி. மு.க. முடிவு செய்து நாளை (17-ந்தேதி) அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் விருப்பப்படி கொடுக்கப்பட்டதால் வேட்பாளர்களையும் தேர்வு செய்து தயாராக வைத்துள்ளனர்.

வடசென்னையில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் நிறுத்தப்படுகிறார்.


கள்ளக்குறிச்சியில் துணை பொதுச்செயலாளர் எல்.கே. சதீஷ் போட்டியிடுகிறார். திருச்சியில் டாக்டர் இளங்கோவன் அறிவிக்கப்படுகிறார்.

விருதுநகர் தொகுதியில் சென்னையைச் சேர்ந்த அப்துல்லா சேட் அல்லது அழகர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தலில் பிரேமலதா நிற்கவில்லை. விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் களம் இறங்குகிறார். #parliamentelection #dmdk #lksudhish

Tags:    

Similar News