உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி வாலிபர் பலி
- சக்திவேல் காவல் கிணறு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- படுகாயம் அடைந்த சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பணகுடி:
நாங்குநேரி அருகே உள்ள உன்னங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் சக்திவேல் (வயது19). மோட்டார் மெக்கானிக். இவர் நேற்று பணகுடி அருகே உள்ள காவல் கிணறு பகுதிக்கு மெக்கானிக் வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அவர் காவல்கிணறு பகுதியில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.