உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வேடசந்தூர் சந்தையில் கொடைரோடு வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-04-18 12:35 IST   |   Update On 2023-04-18 12:35:00 IST
  • இறந்தவர் கொடைரோடு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.
  • குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது

வேடசந்தூர்:

வேடசந்தூர் வாரச்சந்தையில் இன்று காலை ஒரு வாலிபர் தூக்குமாட்டியநிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து

அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் கொடைரோடு பகுதியை சேர்ந்த விசுவாசம் மகன் சிறுமணிசெல்வம்(32) என தெரியவந்தது.

இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வேடசந்தூருக்கு வந்த நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது விசா ரணை யில் தெரிய வந்தது.

Tags:    

Similar News