உள்ளூர் செய்திகள்
கோவையில் தொழில் நஷ்டத்தால் வாலிபர் தற்கொலை
- நேற்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற செல்லதுரை மீண்டும் திரும்பி வரவில்லை.
- சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை கணபதி நேதாஜி நகரை சேர்ந்தவர் செல்லதுரை(39). இவர் சொந்தமாக கிரைண்டர் நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் மன வேதனை அடைந்தார். நேற்று வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இவரது உறவினர்கள் அக்கம்பக்கம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் வேடப்பட்டி குளத்தில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்குவதாக தகவல் வரவே போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அது மாயமான செல்லதுரை என்பது தெரியவந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.