உள்ளூர் செய்திகள்
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
- போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
- குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் தாராசுரம் அருகே உள்ள அம்மாபேட்டை கீழ தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 22). இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதையடுத்து சரவணனின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரை செய்தார்.
இதனைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் சரவணனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.