உள்ளூர் செய்திகள்

கோவையில் வைரக்கல் திருடிய வாலிபர் கைது

Published On 2023-06-10 14:48 IST   |   Update On 2023-06-10 14:48:00 IST
  • ஹசன் வைரக்கல்லை புகைப்படம் எடுத்து விட்டு ஜாகீத்திடம் திருப்பி கொடுத்தார்.
  • போலீசார் ஹசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கோவை,

கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் ஜாகீத்(57). இவர் வைரக்கல் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஜாகீத் துபாயில் இருந்து 6½ பவுன் வைரக்கல் ஒன்று வாங்கினார்.

இவரது நண்பர் ஹசன் (39). இவர் கேரள மாநிலம் பேரமங்களம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஹசன், ஜாகீத் வீட்டிற்கு வந்து வைரக்கல்லை விற்பனைக்காக கேட்டார்.

அப்போது ஜாகீத் தான் வைத்திருந்த வைரக்கல்லை அவரிடம் காண்பித்தார். அதனை பெற்று கொண்ட

இதையடுத்து அவர் வைரக்கல்லை வாங்கி வீட்டிலுள்ள அலமாரியில் வைத்துவிட்டு, வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது ஹசன், அவரது வீட்டில் இல்லை. இதனால் சந்தேகமடைந்த ஜாகீத் வீட்டில் உள்ள அலமாரியை திறந்து பார்த்தபோது வைரக்கல்லை காணவில்லை.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ஹசன் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. இது குறித்து ஜாகீத் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் ஹசனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வைரக்கல்லை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் ஹசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News