உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்.

பாளை மின்வாரிய அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகை- 300 பேர் கைது

Published On 2023-02-16 09:17 GMT   |   Update On 2023-02-16 09:17 GMT
  • மகாராஜநகரில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

நெல்லை:

நெல்லை மகாராஜநகரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சாலை மறியல்

அப்போது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களை பணி நிரந்தரப்படுத்துவது என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

மேலும் புயல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பேரிடர் காலங்களில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும், மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கான தினக்கூலி ரூ. 380 முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

திடீரென சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags:    

Similar News