உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Published On 2022-09-02 13:18 IST   |   Update On 2022-09-02 13:18:00 IST
  • கீழ்ப்பகுதியில் இருந்து உயரமான பகுதிக்கு டிராலி மூலம் எடுத்துச் சென்றபோது அதில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு பக்கெட் மின்சார ஒயரில் மோதியதாக தெரிகிறது.
  • உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

ராசிபுரம்:

ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கு சிமெண்ட் கலவை கலக்கும் எந்திரத்தின் மூலம் (டிராலி) கட்டிடத்தின் மேல் பகுதிக்கு அனுப்பும் பணியில் சேலம் மாவட்டம், காரிப்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலம் அக்ரஹாரத்தைச் சேர்ந்த சசி கண்ணன் (வயது 39) என்பவர் ஈடுபட்டிருந்தார்.

சிமெண்ட் கலவை கீழ்ப்பகுதியில் இருந்து உயரமான பகுதிக்கு டிராலி மூலம் எடுத்துச் சென்றபோது அதில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு பக்கெட் மின்சார ஒயரில் மோதியதாக தெரிகிறது. இதில் பாய்ந்த மின்சாரம் சசிகண்ணன் மீதும் பாய்ந்தது. உடனடியாக அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே சசி கண்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மின்சாரம் தாக்கி இறந்த சசிகண்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. சசிகண்ணனுக்கு தீபா என்ற மனைவியும், 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். இது பற்றி மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News