உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு- சோமனூரில் பெண்கள் போராட்டம்

Published On 2022-06-18 14:22 IST   |   Update On 2022-06-18 14:22:00 IST
பஸ் நிலையத்திற்கு எதிரே டாஸ்மாக் கடை திறக்க படக்கூடாது என டாஸ்மார்க் கடை திறக்க கூடிய இடத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருமத்தம்பட்டி:

சோமனூர் பஸ் நிலையம் எதிரே டாஸ்மாக் கடை திறக்கப்பட இருப்பதாக அப்பகுதியில் பொதுமக்களுக்கு தெரியவந்தது. உடனடியாக அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு எதிரே டாஸ்மாக் கடை திறக்க படக்கூடாது என டாஸ்மார்க் கடை திறக்க கூடிய இடத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த வழியில் செல்ல அச்சப் படுவார்கள். அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளதால் இங்கு மதுபானக்கடை திறக்க வேண்டாம் என முழக்கங்கள் எழுப்பினர். மேலும் இது தொடர்பாக கலெக்டர் மற்றும் நகராட்சி தலைவர், தாசில்தார், கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டருக்கு மனு அளித்து இருப்பதாகவும் உடனடியாக டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News