search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tasma shop"

    பஸ் நிலையத்திற்கு எதிரே டாஸ்மாக் கடை திறக்க படக்கூடாது என டாஸ்மார்க் கடை திறக்க கூடிய இடத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கருமத்தம்பட்டி:

    சோமனூர் பஸ் நிலையம் எதிரே டாஸ்மாக் கடை திறக்கப்பட இருப்பதாக அப்பகுதியில் பொதுமக்களுக்கு தெரியவந்தது. உடனடியாக அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு எதிரே டாஸ்மாக் கடை திறக்க படக்கூடாது என டாஸ்மார்க் கடை திறக்க கூடிய இடத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த வழியில் செல்ல அச்சப் படுவார்கள். அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளதால் இங்கு மதுபானக்கடை திறக்க வேண்டாம் என முழக்கங்கள் எழுப்பினர். மேலும் இது தொடர்பாக கலெக்டர் மற்றும் நகராட்சி தலைவர், தாசில்தார், கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டருக்கு மனு அளித்து இருப்பதாகவும் உடனடியாக டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடைகள் 2 நாட்கள் மூடப்படும் என்று டாஸ்மாக் தொ.மு.ச. தலைவர் கூறினார். #TasmacShop #Tamilnadu
    விழுப்புரம்:

    தமிழ்நாடு டாஸ்மாக் தொ.மு.ச. தலைவர் ராஜவேல் நேற்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்களை இதுநாள் வரையிலும் பணிநிரந்தரம் செய்யவில்லை. 480 நாட்கள் வேலைக்குச்சென்றாலே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இதுகுறித்து பலமுறை தமிழக அரசிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதையடுத்து பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும், அனைத்து கடை ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய, வெளிப்படையான சுழற்சி முறை பணியிட மாறுதலை ஆண்டுக்கு ஒரு முறை செய்ய வேண்டும், கடை ஆய்வு மற்றும் தணிக்கைக்கென தனியான வழிகாட்டுதல் விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8, 9-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

    இதில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 27 ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள். 6 ஆயிரம் கடைகளும் 2 நாட்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருக்கும். இந்த வேலை நிறுத்தத்தில் 11 தொழிற்சங்கங்கள் இணைந்து பங்கேற்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TasmacShop #Tamilnadu
    ×