உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

நத்தத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி

Published On 2023-08-06 08:05 GMT   |   Update On 2023-08-06 08:05 GMT
  • மின் இணைப்பு கொடுக்காத மின் கம்பியில் அருகில் இருந்த ஏற்கனவே மின்சாரம் சென்று கொண்டிருக்கும் மின் வழித்தடத்தில் உரசியது.
  • மின் வழித்தடத்தில் உரசியதால் மின்சாரம் தாக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

நத்தம்:

நத்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச் சந்தையில் நத்தம், மேலூர், சிங்கம்புணரி, கோபால்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் காய்கறி கடைகள் நடத்துவதற்கு வருகின்றனர்.

இன்று காலை மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா எட்டி மங்கலத்தைச் சேர்ந்த நாச்சான் மனைவி பேச்சி (வயது 60) என்பவர் வழக்கம் போல் காய்கறி கடை நடத்துவதற்காக சாலை ஓரத்தில் காய்கறி மூடைகளை அடுக்கி கடை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த இடத்தில் தாழ்வாக செல்லும் பழைய மின் வழி தடத்தை மாற்றி உயரமான அளவில் மின்கம்பம் ஊன்ற ப்பட்டது. அதில் மின் இணைப்பு கொடுக்காமல் மின் கம்பியை சுருட்டி கம்பத்தின் கீழ் தரையில் வைத்திருந்தனர். மின் இணைப்பு கொடுக்காத மின் கம்பியில் அருகில் இருந்த ஏற்கனவே மின்சாரம் சென்று கொண்டிருக்கும் மின் வழித்தடத்தில் உரசியதால் மின்சாரம் தாக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். மின்சார வாரிய அலட்சி யத்தால் பெண் இன்றும் 3 பசுமாடுகள் இதற்கு முன்பும் உயிரி ழந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.

தொடர் சம்பவ ங்களால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து ள்ளனர். இதற்கு தீர்வு காண வே ண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் போலீசார் பேச்சியின் உடலை பிரேத பரிசோ தனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News