உள்ளூர் செய்திகள்
குற்றாலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
- சுடலி தனது மகன் சிவன்பாண்டியுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
- மான் ஒன்று குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது.
நெல்லை:
அம்பை அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடியை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி சுடலி(வயது 50). இவர் சம்பவத்தன்று தென்காசியில் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனது மகன் சிவன்பாண்டி யுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவர்கள் பழைய குற்றாலம் பகுதியில் இரவில் வந்து கொண்டிருந்தபோது மான் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியதில் சுடலி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுடலியை அங்கிருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.