உள்ளூர் செய்திகள்

பெண் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-12-08 14:52 IST   |   Update On 2022-12-08 14:52:00 IST
  • நான் உயிரோடு இருப்பதை விட சாவதே மேல் என அடிக்கடி கூறி வந்துள்ளார்.
  • பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர்:

பண்ருட்டி, திருவதிகை சேர்ந்தவர் ராதா (வயது 50), வாணி (47). இருவரும் அக்காள்தங்கை. ராதாவின் கணவர் இறந்து விட்டதால் தங்கைவாணியுடன் வசித்துவந்தார். எனக்கு யாரும் இல்லை நான்உயிரோடு இருப்பதை விட சாவதே மேல் எனஅடிக்கடி கூறி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவரது நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, வந்த ராதா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இன்று உயிரிழந்தார். இது பற்றி பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு), சப்- இன்ஸ்பெக்டர்சரண்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News