உள்ளூர் செய்திகள்
புதர் மண்டி காட்சியளிக்கும் விளையாட்டு மைதானம்.
புதர் மண்டி காணப்படும் விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா?
- நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக மைதானத்தை சீரமைத்துத்தர வேண்டும்.
- மைதானம் புதர் மண்டி காணப்படுவதால் சிறுவர்கள் விளையாடுவதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள், இளைஞர்கள் விளையாடுவதற்கும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக மைதானம் சீரமைப்பு செய்து தர வேண்டும். முறையான பராமரிப்பு இன்றி, விளையாட்டு மைதானம் முழுவதும் அதிகளவில் புதர் மண்டி காணப்படுவதால் சிறுவர்கள் விளையாடுவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர்.
புதர் அதிகளவில் இருப்பதால் பகலிலேயே விஷ பூச்சிகள் இங்கு அடைக்கலம் ஆகும் வாய்ப்பு உள்ளது.
எனவே பள்ளி மாணவர்கள்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவ ர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானத்தை உடனடியாக சீரமைத்து தரவேண்டுமென அரசுக்கு பொது மக்கள், இளைஞர்கள் மற்றும் சமுதாய நலமன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.