உள்ளூர் செய்திகள்

விளாத்திகுளத்தில் சேதமான மின்கம்பம் உடனடியாக மாற்றப்படுமா?

Published On 2023-06-23 14:20 IST   |   Update On 2023-06-23 14:20:00 IST
  • ராஜிவ் நகரில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் சேதமடைந்துள்ளது.
  • பழுதடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளாத்திகுளம்:

விளாத்திகுளத்தில் இருந்து மதுரை செல்லும் பிரதான சாலையில் பல மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்து, ஆபத்தான நிலையிலும் இருந்து வருகிறது. விளாத்திகுளத்தின் பிரதான சாலையாக விளங்கி வரும் மதுரை ரோட்டில், அம்பாள் நகர் ஆர்ச் அருகில், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் அருகில், பெருநாழி விலக்கு அருகில் என வரிசையாக பல மின்கம்பங்கள் காலாவதியாகி எப்போதும் விழலாம் என்ற ஆபத்தான நிலையில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

ராஜிவ் நகரில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரும் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் விளாத்திகுளம் மின்வாரிய அதிகாரிகள், மின் பொறியாளர்கள் பொதுமக்களின் நலன் கருதி துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக விளாத்திகுளம் பகுதி முழுவதும் பழுதடைந்து காணப்படும் மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் மாற்றி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News