உள்ளூர் செய்திகள்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?

Published On 2023-08-02 10:13 GMT   |   Update On 2023-08-02 10:13 GMT
  • புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.
  • பணிகள் தொடங்கி ஓராண்டை கடந்தும் இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை.

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. இதனால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.

இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பா பிஷேகம் நடத்தப்பட்டது. 18 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கட்டமாக மூலவர் கோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை பாலாலயம் செய்வதற்காக பாலாலய பூஜைகள் தொடங்கின.

தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகின்றன.

இருந்தாலும் பணிகள் தொடங்கி ஓராண்டை கடந்தும் இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை.

குறிப்பாக ஆடி, ஆவணி மாதங்களில் மாரியமமன் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடத்தப்படும்.

தற்போது கும்பாபிஷேகத்திற்காக பாலாலயம் செய்யப்பட்டதால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்ப டவில்லை.

இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எனவே கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News