உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே உள்ள பெங்களுரு, பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை அருகே ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள்.

மத்தூரில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க சென்றபோது அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த 5 பேர் மீது வழக்கு

Published On 2022-10-27 09:40 GMT   |   Update On 2022-10-27 09:40 GMT
  • மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார்.
  • 5 பேர் மீது மத்தூர் போலீஸ் இன்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்மணி மத்தூர் அருகே உள்ள பெங்களுரு, பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையோரம் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த நிலத்தில் அரசு அலவல கங்கள் கட்டுவதற்கும் மற்றும் அரசுக்கு தேவைப் படுவதால் அந்த நிலத்தை தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில் ஆக்கிர மிப்பு செய்தவரிடம் வருவாய்த்துறை சார்பில் சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது தவறு என பலமுறை எச்சரித்தும், காலி செய்யும்படியும் கூறி உள்ளனர்.

ஆனால் அந்த நிலத்தை காலி செய்யாமல் அரசு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் வருவாய் துறை சார்பில் கலெக்டரின் நேரடி பார்வைக்கு இந்த விவகாரம் சென்றதால் அவரது உத்தரவின் பேரில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் திலகம் தலைமையில் ஆக்கிரமித்து வைத்துள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து ஆக்கிரமிப்பாளரை வெளியேறும்படி கூறியுள்ளனர்.

ஆனால் அவர் வெளியேற மாட்டேன் என கூறி அரசு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரசு பணி செய்யவிடாமல் தடுத்து உள்ளார்.

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் 50 மேற்பட்ட போலீஸார் உதவியுடன் ஆக்கரமிப்பு செய்துள்ள நிலத்தில் அமைத்துள்ள பனை ஒலையால் வேய்யப்பட்ட கொட்டகையை பிரித்து எடுத்து காலி செய்தும், அந்த நிலத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக ஆக்கிரமப்பு செய்தால் தண்டனைக்கு உள்ளாவீர்கள் என அறிவிப்பு பலகை வைத்து நிலத்தை முற்றிலும் அரசுக்கு சொந்தமானது என உறுதி செய்தனர்.

இதுகுறித்து அரசு அலுவலர்களை அரசு பணி செய்யவிடாமல் தடுத்த தாலும், வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாலும் மஞ்சுளா (வயது 56), மகாலிங்கம் (60), பிரபாவதி(30), கண்ணன் (37) , மஞ்சுநாத் (எ) கோபி (19) ஆகிய 5 பேர் மீது மத்தூர் போலீஸ் இன்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Tags:    

Similar News