உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி ஊராட்சிகளில் ரூ.2.71 கோடி செலவில் நலத்திட்ட பணிகள்- சுற்றுலா அமைச்சர் ஆய்வு
அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள நெடுகுளா, கெனவக்கரை, குஞ்சுப்பானை ஆகிய 3 ஊராட்சிகளில் நடைபெற்று வரும் ரூ.2.71 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை, தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
அப்போது கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவர் ராம்குமார், கோத்தகிரி ஒன்றியம் நெல்லை கண்ணன், கீழ்கோத்தகிரி ஒன்றியம் காவிநோரை பீமன், செயற்குழு உறுப்பினர் கே.எம். ராஜு, ஆர்.டி.ஓ பூஷணகுமார், தாசில்தார் கோமதி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.