உள்ளூர் செய்திகள்

கனிமொழி எம்.பி. பயனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அருகில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உள்ளனர்.

குரங்கணி ஊராட்சியில் ரூ.52 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் -கனிமொழி எம்.பி. வழங்கினார்

Published On 2023-09-14 09:12 GMT   |   Update On 2023-09-14 09:12 GMT
  • குரங்கணி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் களம், மக்களிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கனிமொழி எம்.பி., தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தென்திருப்பேரை:

ஏரல் வட்டத்திற்கு உட்பட்ட குரங்கணி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் களம், மக்களிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரூ.52 லட்சம் மதிப்பில்

குரங்கணி பஞ்சாயத்து தலைவர் ஜெயமுருகன் தலைமையில் கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரூ.52 லட்சம் மதிப்பில் மொத்தம் 44 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாய நகை கடன், மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன்களை கனிமொழி எம்.பி. வழங்கினார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்தீபன், மாநில தி.மு.க. வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், ஆழ்வை மத்திய செயலாளர் நவீன் குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சாரதா பொன் இசக்கி, துணை அமைப்பாளர் லின்சி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பொற்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆழ்வார்திரு நகரில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன், தென் திருப்பேரை பேரூராட்சி கவுன்சிலர் ஆனந்த், ஆழ்வை கிழக்கு ஒன்றிய துணை பொறுப்பாளர் முத்துராஜா, குரங்கணி தி.மு.க. கிளைச் செய லாளர்கள் ரவி என்ற பெரியசாமி, சித்திரைவேல், ராஜ பெருமாள் மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News