உள்ளூர் செய்திகள்

பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கிய போது எடுத்த படம்.

தென்காசியில் புகைப்பட கண்காட்சியில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-03-17 09:15 GMT   |   Update On 2023-03-17 09:17 GMT
  • தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
  • புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் இலஞ்சி, குற்றாலம், மேலகரம் ஆகிய பேரூராட்சிகளில் தூய்மையான நகரங்களுக்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உடன் இணைந்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா,சதன் திருமலை குமார் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மாலையில் தென்காசி ஐ.சி.ஐ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் நடத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போஸ்,தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, தி.மு.க. நிர்வாகி செங்கோட்டை ரஹீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மகளிர் திட்ட இயக்குனர் குருநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News