உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ், யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் வழங்கிய காட்சி.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர், யூனியன் சேர்மன் வழங்கினர்

Published On 2022-10-29 08:54 GMT   |   Update On 2022-10-29 08:56 GMT
  • அனைத்து துறைகளை சார்ந்த ஒருங்கிணைந்த திட்ட முகாம், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.
  • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், குத்தப்பாஞ்சான் ஊராட்சி, காளத்திமடம் கிராமத்தில், கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாமின் மூலமாக அனைத்து துறைகளை சார்ந்த ஒருங்கிணைந்த திட்ட முகாம், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் முன்னிலை வகித்தார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாமினை பற்றி, பொதுமக்களுக்கு திட்ட உரையினை விளக்கி பேசினார்.

மேலும் குத்தப்பாஞ்ச் சான் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைகளின் மூலமாகவும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ், யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் குத்தபாஞ் ளசான் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணிகுமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்பு பசுபதிதேவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுதா சின்னத்தம்பி, ஒப்பந்ததாரர் கணேஷ் பாண்டியன், அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் என பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News