உள்ளூர் செய்திகள்
புழல் ஏரியில் வாலிபர் உடல்- அடித்துக் கொலையா?
- தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- கடிதத்தில் அவர் என்ன எழுதி உள்ளார் என்பதை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் சண்முகபுரம் அருகே புழல் ஏரியின் கரைப்பகுதியில் வாலிபரின் உடல் ஒன்று தண்ணீரில் மிதந்து வந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பிணமாக கிடந்தவர் அம்பத்தூர் சிவப்பிரகாசம் நகரை சேர்ந்த வெங்கடேசன் (34) என்பது தெரிந்தது. பி.டெக் பட்டப்படிப்பை முடித்து விட்டு பல ஆண்டுகளாக இவர் வேலை தேடி வந்தார். வேலை கிடைக்காத விரக்தியில் நண்பருடன் சேர்ந்து பழல் ஏரி பகுதியில் நேற்று சுற்றி திரிந்தார். அப்போது அவர் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே அவர் வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததாக தெரிய வந்தது. அந்த கடிதத்தில் அவர் என்ன எழுதி உள்ளார் என்பதை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.