உள்ளூர் செய்திகள்

வார்டு சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

வடமதுரை பேரூராட்சியில் வார்டு சபை கூட்டம்

Published On 2022-08-16 06:58 GMT   |   Update On 2022-08-16 06:58 GMT
  • வடமதுரை பேரூராட்சி மக்களிடம் குறைகளை கேட்டறியும் முயற்சியாக வார்டு சபை கூட்டம் நடைபெற்றது.
  • பேரூராட்சியில் நடத்தப்பட்ட வார்டு சபை கூட்டத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்து ஆதரவு தெரிவித்ததுடன் தங்கள் கருத்துகளையும் எடுத்துரைத்தனர்.

வடமதுரை:

தமிழகத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவது போல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் வடமதுரை பேரூராட்சி மக்களிடம் குறைகளை கேட்டறியும் முயற்சியாக முனியாண்டி கோவில் தெருவில் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சி தலைவர் நிருபாராணி கணேசன் தலைமை வகித்தார். செயல்அலுவலர் செல்வராஜ், கவுன்சிலர்கள் சகுந்தலா, விஜயா, மகேஸ்வரி, சுப்பிரமணி, தி.மு.க நகர செயலாளர் கணேசன், செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் தெரிவிக்கையில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க சி.சி.டி.வி காமிராக்கள் அமைக்க வேண்டும். அரை கி.மீ தூரத்தில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பதிலாக காணப்பாடி செல்ல வேண்டிய நிலை இருப்பதால் இதன் எல்லை வரையறையை மாற்ற வேண்டும். மின்மோட்டார் கொண்டு வீடுகளில் தண்ணீர் திருடப்படுவதால் பெரும்பாலான வீடுகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. எனவே இதனை பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதற்கு பதில் அளித்த தலைவர் முறைகேடாக குடிநீர் எடுக்கும் வீடுகளில் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு அந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இணைப்பும் துண்டிக்கப்படும் என்றார். முதல் முயற்சியாக பேரூராட்சியில் நடத்தப்பட்ட வார்டு சபை கூட்டத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்து ஆதரவு தெரிவித்ததுடன் தங்கள் கருத்துகளையும் எடுத்துரைத்தனர்.

இளநிலை உதவியாளர் அபிராமி உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

Tags:    

Similar News