கோத்தகிரியில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
- கடந்த 18-ந்தேதி முதல் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு
- ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு
கோத்தகிரி,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 18-ந்தேதி முதல் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர்.
தொடர்ந்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட்டது.
அப்போது இந்து முன்னணி சார்பில் 81 சிலைகளும், அனுமன்சேனா சார்பில் 32 சிலைகளும் கோத்தகிரியின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் உடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து துவங்கிய ஊர்வலம் காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம், கடைவீதி, ராம்சந்த் வழியாக உயிலட்டி நீர்வீழ்ச்சியை வந்தடைந்தது. பின்னர் அவை நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன. முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.