உள்ளூர் செய்திகள்

சிவகாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சால்வை அணிவித்து வரவேற்றார்.அருகில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்பட பலர் உள்ளனர்.

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டம்

Update: 2022-09-29 08:42 GMT
  • விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
  • கார் மூலம் எடப்பாடி பழனிச்சாமி சிவகாசிக்கு புறப்பட்டு சென்றார்.

சிவகாசி

தி.மு.க. அரசின் வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் மாவட்ட தலைநகரங்களில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகிறார்.

தி.மு.க. அரசின் விலை வாசி உயர்வை கண்டித்து மதுரை, சிவகாசியில் இன்று அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இதற்காக விமானம் மூலம் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி மதுரை வந்தார். அவரை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட கட்சியினர் திரளாக திரண்டு வந்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து கார் மூலம் எடப்பாடி பழனிச்சாமி சிவகாசிக்கு புறப்பட்டு சென்றார். விருதுநகர் மாவட்ட எல்லையில் அ.தி.மு.க. சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சிவகாசி திருத்தங்கல் அண்ணா மலையார் நகரில் நடந்த அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் இந்நாள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இன்று மாலை மதுரையில் நடக்கும் கண்டன பொது கூட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசுகிறார்.

Tags:    

Similar News